முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் 1984 தோன்றியது!!ஆதாரத்துடன் 2006ஜெனிவாவில் அன்டன் பாலசிங்கம் வெளியிட்டார்!!
முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் இப்போது தான் தோன்றியது போல பலர் பேசி வருகிறார்கள் .அது உண்மை அல்ல. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் இந்த ஜிகாத் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
ஆரம்பத்தில் ஓரிரு தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜிகாத், பின் பாரிய கொலைகள், கற்பளிப்புக்கள் எனத் தொடங்கி கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாழும் கிராமங்களை/வர்த்தக ஸ்தாபனங்களை அழிக்கத் தொடங்கினார்கள்.
அக்கால கட்டத்தில் தேசிய ஊடகங்களின் வளர்ச்சியின்மையை சாதகமாக பயன்படுத்தி, இலங்கை முப்படைகளின் ஆசியுடனும், பாதுகாப்புடனும் கொடூரங்களை செய்து கொண்டிருந்தார்கள். மத முலாம் பூசப்பட்டு நடாத்தப்பட்ட இக் கொடூரங்களில் கிழக்கில் கிண்ணியா, மூதூர், காத்தான்குடி, கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று, என தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படாத ஊர்களே இல்லை என சொல்ல முடியும்.
அதேபோல மகிந்த ராஜபக்ச காலத்தில் கோட்டாபய ராஜபக்சவின் அனுசரணையில் இந்த ஜிகாத் குழுக்கள் தமிழர்களுக்கு எதிராகவும், புலிகள் இயக்கத்திற்கு எதிராகவும், தமிழ் முஸ்லீம் முரண்பாடுகளை உருவாக்கும் வகையிலும் இலங்கை புலனாய்வு துறையால் பயன்படுத்த பட்டனர்.
2010 ஆம் ஆண்டில் இந்த ஜிகாத் குழுக்களின் ஆயுதங்களை முழுமையாக களைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் சொன்னாலும் அது முழுமையாக களையப்படவில்லை
2006 ஆம் ஆண்டு மாசி மாதம் 22 /23 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் அன்டோன் பாலசிங்கம் அவர்கள் மிக தெளிவாக 5 துணை ஆயுத குழுக்கள் (Karuna group, EPDP group, PLOTE group, EPRLF (Varathar) group and a Muslim Paramilitary group called Jihad group) , அதனை இயக்கும் ராணுவ அதிகாரிகள் , ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தான் தொடர்புகள் என பல விடயங்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருந்தார் .உண்மையில் அந்த காலப்பகுதியில் அதாவுல்லா உட்பட்ட அமைச்சர்களின் வாகனங்களில் கூட இந்த குழுக்களுக்கு தேவையான ஆயுதங்கள் கடத்தப்பட்டன .
கலாநிதி பாலசிங்கம் அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் நிகழ்த்திய தலைமை உரையில் (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17260)
குறிப்பிட்ட விடயங்கள் அவர் மொழிநடையில் "There are five major paramilitary groups operating in the northeast and in Colombo. They are known as Karuna group, EPDP group, PLOTE group, EPRLF (Varaithar) group and a Muslim Paramilitary group called Jihad group. In our report we have given detailed information about each group, the names of leaders and area operational commanders functioning in various districts and in the capital. We are certain that the Sri Lankan military hierarchy, particularly the Sri Lanka military intelligence, is well aware of the existence and activities of the Tamil armed paramilitaries. Nevertheless, we are also providing you with detailed factual information to reinforce our argument."
இன்றைக்கு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலராக வர வேண்டும் என கோஷம் போடுபவர்களும் இலங்கை ராணுவத்திற்கு வெள்ளை அடிப்பவர்களுக்கும் இந்த குழுக்களை உருவாக்கி அப்பாவிகளை வேட்டையாட இந்த குழுக்களுக்கு கற்று கொடுத்ததே இலங்கை ராணுவமும் கோத்தாப்பய ராஜபக்சே போன்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும் என்பது தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது
கருத்துகள் இல்லை