பிரதான சூத்திரதாரியின் சகோதரியின் போலிமுகம் அம்பலம்!!

தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக மொஹமட் சஹ்ரான் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து சஹ்ரானின் கடைசி தங்கை நியாஸ் மதனியா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

தனது சகோதரின் கொடூர செயலை கண்டிப்பதாக ஊடகங்கள் வாயிலாக முதலைக் கண்ணீர் வடித்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பயங்கரவாத தாக்குதலுடன் நியாஸ் மதனியாவுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதற்கமைய நேற்று முன்தினம் நியாஸ் மதனியா மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தன்னிடம் இந்த பணத்தை வழங்கியதாக பொலிஸ் விசாரணைகளின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சஹ்ரான் மற்றும் அவரது செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கடுமையான விமர்சித்திருந்தார்.

பிபிசி செய்தி சேவையிடம் கருத்து வெளியிட்ட மதனியா, “சகோதரின் செயற்பாடு தொடர்பில் ஊடக வாயிலாகவே அறிந்து கொண்டேன். நான் ஒரு போதும் அவர் இப்படியான காரியத்தை செய்வார் என நினைக்கவில்லை. இடம்பெற்றிருப்பது ஒரு பயங்கரமாக சம்பவமாகும். அடுத்து என்ன நடக்கும் என நினைத்து கொள்ள முடியவில்லை. அவர் செய்த விடயங்களை நான் முழுமையாக எதிர்கிறேன். அவர் எனது சகோதரராக இருந்த போதிலும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தற்போது அவரின் கருத்துக்கள் அனைத்தும் போலியானவை என தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.