களையிழந்து கிடக்கிறது கட்டுநாயக்கா விமானநிலையம்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.


முன்னரைப் போல வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை வரவேற்க யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பயணிகளை வழியனுப்பவும் யாரும் உள்ளே செல்ல முடியாது.

இதனால் பயணிகளை வீதியிலேயே வழியனுப்பிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, பயணிகளை வரவேற்க மணிக்கணக்கில் உறவினர்கள் வீதிகளில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டாலும் தாக்குதல் பீதியில் வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

நாளொன்றிற்கு 7 ஆயிரம் வரையான பயணிகள் வெளியேறும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது இரண்டாயிரம் வரையான பயணிகளேவெளியேறுகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் தாக்குதல்தாரிகளின் திட்டம் முற்றாக முறியடிக்கப்படவில்லை. அதனை நிரூபிக்கும் வகையில் நாளாந்தம் வெடிபொருட்களும், ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.