லியோன் வெடிகுண்டு தாக்குதல்-இருவர் கைது!

லியோனில் தாக்குதல் இடம்பெற்று மூன்றாவது நாளில், அதன் சூத்திரதாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபர் 24 வயதுடையவர் எனவும், அவரின் மற்றுமொரு உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தவிர, 18 வயதுடைய அவனது சகோதரன், மற்றும் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெதுப்பகத்தில் வெடிகுண்டு பொதியினை வைத்ததற்குரிய காரணங்கள் குறித்து இதுவரை அறியமுடியவில்லை.

கைது செய்யப்பட்ட பிரதான குற்றவாளி 24 வயதுடைய கணனி விஞ்ஞான மாணவன் எனவும், அல்ஜீரிய நாட்டு குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோன் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள boulevard Yves Farge  இல் வைத்து எவ்வித ஆர்ப்பாட்டங்களும் இன்றி அவன் கைது செய்யப்பட்டான். கண்காணிப்பு கமராக்களின் உதவியால் இந்த கைது நடவடிக்கை சாத்தியமாகியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.