திருமணம் எப்போது? சிம்பு விளக்கம்!

திரையுலகில் காதல், திருமணம் தொடர்பான வதந்திகள் நடிகைகளைச் சுற்றியே அதிகம் வலம் வரும். நடிகைகளுக்கு இணையாக வதந்திகளைப் பெரும் நடிகர் சிம்பு தான்.


சிம்புவின் திருமணம் தொடர்பாக தற்போது வலம் வரும் வதந்தி எத்தனையாவது என்பது அவருக்கும் தெரியாது.

சிம்புவின் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் பரவிவரும் நிலையில், சில நாள்களாக தனது தாயார் பார்த்துள்ள உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கு சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார் என்று செய்திகள் பரவின. அது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். ‘என்னுடைய பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. ஒருவேளை ஊடகங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள் பரவுகின்றன. தற்போது திருமணம் குறித்து எந்தத் திட்டமும் இல்லை என்பதை விளக்கிக்கொள்கிறேன். அதற்கான உரிய நேரத்தில் இதுகுறித்து நானே தெரிவிப்பேன். என்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் நிறைய வதந்திகள் பரவுகின்றன. ஒரு சினிமா நடிகராகப் பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களைச் சந்திக்கவேண்டி இருக்கும். இது இணைந்து படம் இயக்குவதற்கு என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இத்தகைய வதந்திகளால் என்னுடைய ரசிகர்கள் ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வு அடைகின்றனர். நான் உறுதியாக இருப்பதற்கு என்னுடன் இணைந்து நிற்கும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது மாநாடு படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.