யாழ்.பலாலி இராணுவ முகாமில் வெடிவிபத்து!!

யாழ்.பலாலி இராணுவ முகாமில் இன்று பிற்பகல் 4 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இக்குண்டுவெடிப்பில் ஒரு இராணுவச் சிப்பாய் பலியாகியுள்ளதுடன், 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இராணுவ முகாமுக்குள் இருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பலாலி இராணுவத்தினர் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தவித தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.