விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறை!! அமெரிக்கா அதிரடி!!

அமெரிக்க விசா நடைமுறைகளில் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.


இதற்கமைய விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்களை ஆராய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக வலைத்தள கணக்குகள் குறித்த விபரங்களுடன், கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை சமர்ப்பிக்க வேண்டும் என புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டபோது, குறித்த புதிய விதிமுறைகள் காரணமாக ஓராண்டிற்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது.

அரச ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறப்படுகின்றது. எனினும், அமெரிக்காவுக்கு பணிவாய்ப்பு அல்லது கல்வி தொடர்பாக செல்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.