கண்டிப்பாக பவுன்சர் வைத்தியம் கொடுப்போம்!! கோல்டர் நைல்!!

உலகக்கோப்பைன்னு சொன்னாலே போதும் ஆஸ்திரேலியாவுக்கு அசுர பலம் வந்திடும்.  இதுவரை நடந்த 11 உலகக்கோப்பை தொடர்களில், 7 முறை ஃபனல்.
5 முறை வேர்ல்டு கப் வின்னர். 1999 - 2007 வரை தொடர்ச்சியா மூன்று முறை சாம்பியன். இந்த முறையும் ஒரு வலுவான அணியாகத்தான் உலகக்கோப்பைக்கு வந்துள்ளனர். கடந்தாண்டு  கைப்புள்ள போல் இருந்த அணி திடீரென கட்டத்துரையாக மாறிவிட்டது.  2018 ஆரம்பம் என்னவோ ஆஸ்திரேலியாவுக்கு அட்டகாசமாகத் தான் இருந்தது. மார்ச் மாதம் வரை கெத்தா தான் இருந்தது ஆஸி.,. ஸ்மித், வார்னர், பேங்காராப்ட் 3 பேரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்கள். 3 பேரும் ஒருவருடம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது.

அதிரடிக்குப் பெயர் போன வார்னர், மிடில் ஆர்டரை தாங்கிய ஸ்மித் இருவரும் இல்லாததால் எல்லாம் தலைகீழாக மாறியது. ‘பேச்சா டா பேசுனிங்க’ என்ற டோனில் மற்ற அணிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவை வெச்சு செய்தது. கோலி தலைமையிலான இந்திய அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்த கெட்டதுலயும் ஒரு நல்ல விஷயமா ஆரோன் பின்ச், மெக்ஸ்வேல்  போன்றவர்கள் தங்களது பழைய ஃபார்மை மீட்டெடுத்தார்கள். எந்த மார்ச் மாதம் விதியை மாற்றியதோ சரியாக ஒரு வருடம் கழித்து அதே மாதத்தில்  மீண்டும் விதியை  மாற்றி எழுதினார்கள் ஆஸி வீரர்கள். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. கவாஜா, பின்ச், மேக்ஸ்வெல், டர்னர் எல்லாம் ஒரு காட்டு காட்டினார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானை துவம்சம் செய்தார்கள்.

இந்த இடைவெளியில் ஸ்மித், வார்னரின் ஒரு வருட தடைக்காலமும் முடிந்தது. ஐபிஎல் போட்டியில் வார்னர் வெளுத்து வாங்கினார். இந்த உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, இலங்கைக்கு எதிராக வெற்றி. பயிற்சி ஆட்டத்தில் ஸ்மித் ஒரு சதத்தை விளாசி ஃபார்மை நிரூபித்தார். உலகக்கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தானை நேற்று பதம் பார்த்தார்கள். வார்னர்,ஸ்மித் கம்பேக் ஆஸ்திரேலியாவுக்கு புது தெம்பை அளித்துள்ளது. அடுத்தப்போடியில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 105 ரன்களுக்குள் சுருட்டியது. இந்தத்தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிமுகத்துடன் துவங்கியுள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் மற்ற அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் கோல்டர் நைல். “ மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பவுன்சர் வைத்திய அளிக்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் இறங்கிவந்து மைதானத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறவிடுவார்கள். அவர்களுக்குக் கண்டிப்பாக பவுன்சர் வைத்தியம் கொடுப்போம். மற்ற அணிகளுக்கு அதே சிகிச்சை அளிக்கக் காத்திருக்கிறோம். ஓவருக்கு 2 பவுன்சர்கள் தாராளமாக வரும். மேற்கு இந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு அளித்த சிகிச்சையை அவர்களுக்குத் தர காத்திருக்கிறோம்” என்கிறார் நைல்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.