யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து பீடம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக இந்து பீடம் ஆரம்பிப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைவதாக இந்து குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும்,

இந்து நாகரீகத்துறை என்கின்ற ஒரு பாரம்பரியமான, தனித்துவமிக்க துறை ஒன்றும், யாழ்ப்பாண சமுதாயத்திற்கு பொருத்தமுடைய சைவ சித்தாந்த துறையும் புதிதாக இணைக்கப்படுவது பெரும் வரப்பிரசாதம் ஆகும்.

சமஸ்கிருத துறையுடன் மூன்று துறைகள் ஆரம்ப கட்டத்தில் இருந்தே தொடங்க இருக்கின்ற முயற்சி இறைவன் திருவருள் என்றே கூற வேண்டும்.

பார்வதி பரமேஸ்வரனின் திருவருளால், இத்தகைய முயற்சிகள் வளர்ச்சி பெற வேண்டும் என ஆசிர்வதிப்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம்.

யாழ்ப்பாண சமுதாயத்தில் சைவத்தினை யாழ்ப்பாண தமிழர்கள் பெருமூச்சாக கொண்டனர். இதனது அடியூற்றே உலகளாவிய ரீதியிலே என்றும் எமது பண்பாடாக பரந்து நிற்கின்றது.

இத்தகைய ஒரு உன்னத முயற்சிக்கு நாம் எங்களால் ஆன ஒத்துழைப்பை என்றும் வழங்குவோம் என்பதோடு, சவால்கள் மிகுந்த எமது சமுதாயத்தின் பல்வேறு விதமான முகங்களுக்கும், அறிவுசார் துறையில் உங்களது துறை என்றும் வளம் பெற்ற ஒரு வளமாக அமைய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

இந்த பீடம் என்றும் வளமும், வளர்ச்சியும் பெற வேண்டும் என ஆசிர்வதித்து பெரும் மகிழ்வடைகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.