அதிகரிக்கும் மணல் கொள்ளை -மக்கள் கவலை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்து வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இரவு பகலாகக் கனரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுவருகிறது. பல இடங்களில் அரசியல் மற்றும் அதிகார தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் பொது மக்கள் ஆதாரப்பூர்வமாகத் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்குள் இவ்வாறு இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட பெருமளவு மணல் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றத்திற்கு முன்பாக வீதியோரமாகக் காணப்படுகின்றமை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவும்,

காவல்துறையினரிடம் பிடிபடாமலும் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே உரியத் தரப்பினர்கள் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தவறின் கிளிநொச்சி மாவட்டம் பாரியளவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் எனவும் பொது மக்களால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.