சகல துறைகளிலும் அரசியல் தலையீடு தவிர்க்கப்படவேண்டும் - ராஜித!!

அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளமையே அபிவிருத்தியின் பின்னடைவிற்கு  காரணம் என தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின்  அனைத்து  துறைகளிலும் அரசியல் தாக்கம் செலுத்த  கூடாது என கூறினார்.


களுத்துறை பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல், கட்சி ரீதியில் மாத்திரமே செல்வாக்கு செலுத்த வேண்டும் ஆனால் நடைமுறையில் மதம் உள்ளிட்ட அனைத்திலும் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துகின்றது .

எமது நாட்டில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றது. ஆனால் அனைத்திலும் அரசியல் கருத்துக்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

குறுகிய காலத்திற்குள் அனைத்து துறைகளும் முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறையில்  பல நவீன தொழினுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சாதாரண தரப்பினரும் உயர் தொழினுட்பங்களை உள்ளடக்கிய மருத்துவத்தை பெற்றுக் கொள்ளும் வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாம் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும்  அரசியல் தாக்கம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.