காட்டு யானைகள் தளவாய் - மதுரங்குடா கிராமத்திற்குள் அட்டகாசம்!!

மட்டக்களப்பு - ஏறாவூர் நகரத்தை அண்டிய தளவாய் - மதுரங்குடா கிராமத்திற்குள் முதன் முறையாக நேற்றிரவு நுழைந்த காட்டு யானைகள் தென்னம் தோட்டங்களை துவம்சம் செய்துள்ளன.


இந்த விடயம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில்,

இவ்விதம் தமது பிரதேசத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவே. காட்டு யானைகள் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளன.

தென்னம் கன்றுகளின் குருத்துப் பகுதியை பிடுங்கி எடுத்து அவற்றை உண்டுள்ளன. இவ்வாறு குருத்துக்கள் பிடுங்கப்பட்ட தென்னங்கன்றுகள் வளர முடியாமல் இறந்து போய் விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பற்குணசிங்கம் ஜெயகாந்தன், சரவணபவன் இராஜேஸ்வரன், யோகராசா லுவானந்தராசா ஆகியோருக்கு சொந்தமான மூன்று தென்னந் தோட்டங்களே துவம்சம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.