மோடி கூட்டமைப்பு சந்திப்பு வலியுறுத்தப்பட வேண்டியவை என்ன??

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தங்களை இலங்கை அரசிற்கு பிரயோகிக்குமாறு கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும்.

 இந்திய - இலங்கை ஒப்பந்தம் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையின் நிலையினையும் கூட்டமைப்பு எடுத்துக் கூற வேண்டும்.
வடக்கு கிழக்கில் வேலையில்லாப் பிரச்சனைகளிற்கு தீர்க்கும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக்க உதவி செய்ய வலியுறுத்த வேண்டும்.
காங்கேசன் துறை துறைமுக அபிவிருத்தியினையும், பலாலி விமான நிலைய அபிவிருத்தியினையும் துரிதப்படுத்துவதன் மூலமாக வடக்கிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த உதவுமாறு வலியுறுத்த வேண்டும்.

இவை அனைத்துக்கும் அப்பால் முக்கியமான ஓர் அழுத்தத்தை கூட்டமைப்பு கொடுக்க வேண்டும்.

இனப்பிரச்சினை தீர்விற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க தவறினால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக நாம் சீனாவுடன் கைகோர்க்க நேரிடும் என்கிற நெருக்கடியினை கூட்டமைப்பு இந்தியாவிற்கு ஏற்படுத்த வேண்டும்.

சம்பந்தர் தனது சாணக்கியத்தை வெளிப்படுத்துவாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கைக்கு நான்கு மணி நேர விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோரை தனித் தனியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.