அறிவின் சிகரம் எரிந்தநாள்!!

ஆசியாவிலேயே மிகப் பெரிய
நூலகம்
மூசிவீசிய சிங்கள ஏகாதிபத்திய
தீயில்
கருகிய நாள்!

ஓலைச்சுவடிகள் முதல்
பழைய பத்திரிகைகளின்
மூலப்பிரதிகள் வரை
பல்லாயிரக்கணக்கில்
எங்கள் அறிவுத்தேடல்களை
இனவெறி நெருப்பு
பொசுக்கிய நாள்!

அறிவியலை அழித்தால்
மட்டுமே
உளவியலை தகர்கமுடியுமென
காடையர்கள் கைவரிசை
காட்டிய துயர் படிந்த நாள்!

இதுவே
தமிழினத்தின்
நீள் எழுச்சிக்கு வித்திட்ட
விடுதலையின் எழுச்சி
நாள்!

✍தூயவன்

No comments

Powered by Blogger.