விக்கி ஐயா,கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இணைவு தவிர்க்க முடியாத ஒன்று!!

இருவரும் இணைவதன் மூலமே சரிந்து கிடக்கும் தமிழர் அரசியலை தூக்கி நிறுத்த முடியும். தமிழர் அரசு கட்சியின் அண்மைக்கால அரசியல் போக்குகளால் அதிர்ப்தி அடைந்த பெருந்தொகையான இளைஞர்கள், மக்கள் இதனையே விரும்புகின்றோம்.

எனவே இவர்கள் இருவரையும் இணைக்கும் செயற்பாட்டில் தீவிரமாக இளைஞர்கள் ஈடுபட வேண்டியுள்ளது.

இவர்கள் இருவரும் பிரிந்து கிடப்பது தமிழ் அரசு கட்சி போன்ற சிங்கள கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் எனவே ஒன்றிணைவை வலியுறுத்தும் வகையில்  இளைஞர்கள் சிந்தித்து செயற்படுவதன் மூலமே இத்தகைய சிங்கள கட்சிகளை வடக்கு கிழக்கில் இருந்து ஒழிக்க முடியும்.

எனவே இளைஞர்கள் இது தொடர்பாக இணைத்து பேசி, கலந்துரையாட ஒரு ஒன்றுகூடலை ஒழுங்கமைப்பது தொடர்பில் உங்கள் கருத்துக்களை ஆரோக்கியமாக பதிவிடுங்கள்.

Powered by Blogger.