பதில் கடமை புரியும் மூன்று அமைச்சர்கள் நியமனம்!!📷

நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்த்தன ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (10) நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமைபுரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேநேரம் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் பிரதியமைச்சர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் விருத்தி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி பதில்கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ் அமைச்சர்கள் இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.


No comments

Powered by Blogger.