பல வருடங்களின் பின் பெற்றோரை சந்தித்து பூரிப்படைந்த பெண் கைதி!

14 வருடங்களுக்கு பின்னர் பெற்றோருடன் பெண் கைதியை சந்திக்க வைக்க டுபாய் பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
டுபாய் பெண்கள் சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபி செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடம் சகிப்புத்தன்மை வருடமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு டுபாய் பொலிஸார் சார்பில் கைதிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதில் நீண்டகாலம் பெற்றோர் அல்லது குடும்பத்தினரை சந்திக்காத கைதிகள் மற்றும் அவர்களுடைய சிறிய ஆசைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 14 வருடங்களாக தனது பெற்றோரை சந்திக்கவில்லை என அறிவித்திருந்தார்.

அதனை கவனத்தில் கொண்டு டுபாய் பொலிஸார் சார்பில் அந்த பெண்ணின் பெற்றோர் டுபாய்க்கு வரவழைக்கப்பட்டனர். இந்த விடயம் அந்த பெண் கைதிக்கு தெரியப்படுத்தப்படவில்லை. பெற்றோர் வந்ததும் அந்த பெண் கைதிக்கு திடீரென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.

அவர் வெளியில் வந்தபோது, தனது கண் முன் பெற்றோரை பார்த்ததும், இது கனவா அல்லது நிஜமா என்று ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.

இதையடுத்து சகஜ நிலைக்கு வந்த அவர் தனது பெற்றோரை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டார். தற்போது சிறையில் இருக்கும் அந்த பெண் போதை பழக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார்.

கைவினை பொருட்களை வடிவமைப்பதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அரபு, ரஷ்ய, ஹிந்தி மற்றும் நைஜீரிய மொழியை கற்றுக்கொண்டுள்ளார். அந்த பெண்ணின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு மனித நேயத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அவரது மாற்றங்களை பார்த்தும், ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்தியதற்காகவும் பொலிஸாருக்கு குறித்த பெண்ணின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். அவரின் நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்ததாக சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபி குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


Powered by Blogger.