ஜீவன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!!

‘நான் அவனில்லை,’ ‘திருட்டுப்பயலே,’ ‘தோட்டா’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் ஜீவன்னின் புதிய  திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஜி.கே. என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிப்பில் ஜீவன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்துக்கு ‘அசரீரி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர், ”அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் சார்ந்த திகில் திரைப்படமாகும். கலாசாரத்துடன் மரபு ரீதியான தொடர்பை கொண்ட புராண கதைகளை, இது நினைவூட்டும்.

‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்துக்குள் உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகின்றது என்பதை இக்கதை சித்தரிக்கின்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்த கதையை ரசிப்பார்கள். கதைகளை தேர்வு செய்து நடிப்பவர், ஜீவன். அவர் இந்த படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர் என்பதால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது.

மேலும் இதில் முன்னணி நடிகை ஒருவர், கதாநாயகியாக நடிக்கவுள்ளார். பிரபல நடிகர்-நடிகைகள் பலரும் இதில் நடிக்கவுள்ளார்கள்” என கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.