உலகக் கோப்பை: ஷிகர் தவன் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஷிகர் தவன், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஜூன் 9ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. சதமடித்து வெற்றிக்கு உதவியாக இருந்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இப்போட்டியில் பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சரை எதிர்கொண்ட தவனுக்கு இடது கைவிரலில் காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற தவன், பீல்டிங் செய்ய வரவில்லை. இந்நிலையில், தவனின் கட்டைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் பலமாக இருப்பதாகவும், மூன்று வாரங்கள் ஓய்வெடுக்கும்படியும் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஷிகர் தவன் உலகக் கோப்பை தொடரில் விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக, ரோஹித் ஷர்மாவுடன் லோகேஷ் ராகுல் துவக்க வீரராகக் களமிறங்கவிருக்கிறார். எனவே, நம்பர்.4 இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் ஷங்கரை களமிறக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது தவனுக்குப் பதிலாகப் புதிதாக அணியில் சேர்க்கப்படும் ரிஷப் பண்ட் அல்லது அம்பத்தி ராயுடுவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.


ஷகர் தவனின் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவன் அணியில் இல்லாதது இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.