இ.போ.ச. ஊழியர்களின் போராட்டம் முடிந்தது!!


தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வழங்கிய இணக்கப்பாட்டுக்கு அமைய பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்கு இணையான சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி, கடந்த இரு நாட்களாக சிறிகொத்தவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

அதன்பின்னர். தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


Powered by Blogger.