பகல்தூக்கம் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை..!

நல்ல தூக்கம் இன்று பலருக்கும் பெரும் கனவு. தூக்கம் வராமல் புலம்புபவர் பலர் உண்டு. தூக்கத்தின் அருமை அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இன்னும் சிலர் தினசரி அன்றாட தூக்கத்துக்கே மாத்திரை எடுத்துக் கொள்வதை பார்த்திருப்போம்.

இன்னும் சிலரோ சும்மா படுத்தாலே சிறிது நேரத்தில் தூங்கி விடுவார்கள். அதிலும் பலர் பகல் நேரத்திலும் தூங்குவதைப் பார்த்திருப்போம். குறிப்பாக பலரும் மதிய சாப்பாட்டுக்கு பின்னால் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுவதைப் பார்த்திருப்போம். இது மிகப்பெரிய தவறு. பொதுவாக நம் உடல் குளிர்ச்சியான சூழலில் தான் தூங்கிப் பழகியிருக்கும். பகல் நேரம் என்பது உஷ்ண காலம்.
பொதுவாகவே தூக்கத்தில் தான் நம் உடல் வளர்ச்சி அடையும். அது இரவுநேர தூக்கத்தில் தான் நடக்கும். நல்லதூக்கம் தான் நலமான வாழ்வுக்கு அடிப்படை. நன்றாக தூங்காவிட்டால் சோர்வு, மலச்சிக்கல், ஒவ்வாமை, படபடப்பு உள்ளிட்ட ஏராளமான நோய்கள் தாக்கும்.
இதேபோல் எப்படி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும் என்றும் அன்றே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி கிழக்கு திசையில் தலைவைத்து படுப்பது தான் உத்தமம். தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசை கனவு, அதிர்ச்சியை உருவாக்கும். வடக்குதிசையில் மட்டும் தலைவைத்து படுக்கவே கூடாது. வடக்குதிசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது பிரான சக்தியையும் இழக்க நேரிடும்.
இது விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மூளை செயல்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் இதயம், நரம்பு சம்பந்தமான நோய்களும் வரும்.
இதேபோல் தலை குப்புர கவிழ்ந்தும் தூங்கக் கூடாது. மல்லாந்து கை, கால்கள் அகட்டிய வாக்கில் சிலர் தூங்குவார்கள். இவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காது. கூடவே இதனால் குரட்டையும் உருவாகும்.
இடதுகை கீழாகவும், வலதுகை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடதுபுறம் ஒருக்கலித்து படுப்பதே சரி. இதனால் வலதுமூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்லும். இதனால் ஆயுள் கூடும். இதன் மூலம் இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைத்து இதயம் பலம் பெரும். உண்ட உணவும் எளிதில் சீரானமாகும்.
சரி பகலில் தூங்கினால் என்னவாகும் தெரியுமா? உடல் எடை தாறுமாறான அளவு கூடும். எளிதில் நோய்கள் தொற்றிக் கொள்ளும். காரணம் உடல் எடை அதிகரிப்புத்தான் பல நோய்களுக்கு திறவுகோல். மேலும் உடல் உழைப்பை செலுத்த வேண்டிய நேரத்தில் தூங்குவது, உடலில் வியர்வையையும் வெளியே தள்ள விடாமல் நாமே தடை போட்டதுபோல் இருக்கும்.
அப்போ இனி நல்லா தூங்குங்க...ஆனா அதுக்கான நேரத்தில் மட்டும் தூங்குங்க!

No comments

Powered by Blogger.