வேர்ல்டுகப் கிரிக்கெட் : இன்னைக்குதான் இருக்கு நியூசிலாந்துக்கு ரியல் சேலஞ்ச் !

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இதுவரை தாங்கள் விளையாடிய ஆட்டங்களில் தோல்வியையே தழுவாத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ரவுண்ட் - ராபின் சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம்,  இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
இதேபோன்று, தாம் இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என வலுவான அணிகளை வெற்றி கொண்டுள்ள தெம்புடன், மற்றொரு வலுவான அணியான நியூசிலாந்தை, இந்தியா இன்று எதிர்கொள்ள உள்ளது.
பேட்டிங்கை பொருத்தவரை இரு அணிகளும் சமபலத்துடன் தான் உள்ளன. அதேசமயம், பெளலிங்கை வைத்து ஒப்பிடும்போது, நியூசிலாந்து அணியைவிட இந்திய அணி ஒருபடி மேலாக தான் உள்ளது.
குறிப்பாக இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள், நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களே இன்றைய ஆட்டத்தின் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கும் வகிக்க உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து நியூசிலாந்து அணியையும் தோற்கடித்து, இந்தியா இன்று ஹாட்ரிக் வெற்றியை பெறும் என நாம் தைரியமாக "பெட்" கூட கட்டலாம்... ஆனால், ஒரேயொரு விஷயம்... மேட்ச் நடைபெறவுள்ள நாட்டிங்ஹாமில் மழை பெய்து ஆட்டம் தடைபடாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான்...
ராமசுந்தரம்,
தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.