பேட்டிங்கா..? பௌலிங்கா..? இல்லை ஸ்விமிங்....! கோலி எடுத்த அதிரடி முடிவு!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரின் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில், இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் கைவிடப்பட்டது. 

இன்றைய போட்டியுடன் சேர்த்து, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நான்கு ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளன.  தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள், விதவிதமான மீம்ஸ்களின் மூலம் தங்களது ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சில சாம்பிள்கள்:
டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி,  மைதானத்தில் முதலில் நீச்சல் (ஸ்விமிங்) அடைக்க முடிவு செய்துள்ளார்.


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, மைதானத்தில் முதலில் மீன் பிடிக்க தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்தில் கடலுக்கடியில் கிரிக்கெட் விளையாடுவது தான் சிறந்த வழி.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டியில் டாஸ் போடுவாங்க, போடுவாங்கன்னு காத்திருந்து நாங்கள் எலும்புகூடாவே மாறிவிட்டோம்...என, இப்படி விதவிதமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.