ஏழே காலும் எம் வாழ்வும்.....!

காதுக்குள் குளிர் புகுந்து பனிக்குளிரிலே இதயம் நடுங்குதே
காலையில் விழிப்பதென்றால் என்
பிள்ளையும் மனம் நோகுதே
உதடுகள் நடுங்கிட சுடுநீரில் அமிழ்த்தி
ஆலாபணை நடக்குதே
என்னையும் தாண்டி பாடசாலை நேரம்
பிள்ளைக்கு வலிக்குதே
ஏழேகால் என்று எவன்தான் ஒருத்தன்
நேரங்குறிச்சான்?
எட்டுமணிக்கு பள்ளி தொடங்கினால்
எவன் இங்கு எதிர்ப்பான்
வாழ்க்கைக்குதானே வளமான கல்வி
வாழுவதற்காகதானே அழகான கல்வி
கல்வி என்பது கற்பவனுக்கு பிடிக்க
வேண்டாமா?
கல்வியை கற்றிட தானாக ஆசைதான்
எவருக்கும் கிட்டாதா?
கேள்விகள் கேட்டால் கேட்பவனை
முட்டாள் என்பார்
கேலிகள் பலசெய்து வேடிக்கையாய்
இவர் விளம்பரம் செய்வார்
எங்கள் காலத்தில் எட்டரைக்கு
தொடங்கும் பள்ளி
எட்டி எட்டி நடந்து செல்ல ஒன்பது
மணிக்கு பாடம் தொடங்கும்
இரண்டரை மணிக்குமேல் எவனும்
பள்ளியில் நிற்பதில்லை
இரண்டு ரியூசனுக்கு ஓடி எவனும்
படிப்பதில்லை
பேசனல் கிளாஸ் இல்லை பிள்ளைக்கு
ஒப்படை உபத்திரம் இல்லை
பதினைந்து ரூபா வசதி கட்டணத்தில்
பாஸ் பண்ணியவர் நாங்கள்
புதினங்கள் போல பாடத்தை புரட்டி
படித்தவர்கள் நாங்கள்
எல்லாமே மாறிப்போச்சு எதற்காக
என்பதே இங்கு கேள்வியாச்சு?
எட்டரைக்கு பள்ளி தொடங்கினால்
குடியா முழுகி விடும்
ஏனிந்த கல்வித்திட்டமிடல் முறைமை
எதற்காக நேரகட்டுப்பாட்டு திறமை
எட்டுபாட வேளையும் பூரணமாய்
கல்வி நடந்தால்
ஏழேகால் இல்லை ஆறேகாலுக்குகூட
பள்ளி தொடங்கலாம்
நடப்பதோ நாலுபாடம் நடக்காத பாடமே
ரியூசன் மந்திரம்
அறிவான ஆசான்களே ஆற்றல்
தூண்களே அனைவரும் கூறுங்கள்
ஏழேகாலுக்கு பள்ளி தொடங்கத்தான்
வேணுமா?

-கதிரோவியன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.