யாழ் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் நடந்த விபத்தில் யாழ் இ்ந்து மாணவன் பலி!!


யாழில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியிருந்தார். இவர் கொக்குவில் கிழக்கு சேர்ச் லேனைச் சேர்ந்த தர்மானந்தசிவம் நித்திலன் (வயது-19) என்பவரே என்று அவரது தந்தை தர்மானந்தசிவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அடையாளம் காட்டியிருந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், வேகக் கட்டுப்பாட்டையிழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று இறப்பு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை தந்தையாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.