வாக்குகளைக் கொள்ளையடிக்கவே தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டுமாம்!!


தமிழர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காகவே, தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தினார். மேலும், அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக மக்களின் ஆணையைப் பெற்று, கூட்டணி அமைத்துக்கொள்வதே ஆரோக்கியமான வழிமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் அச்சுவேலி மூளாய் பகுதிக்கான சிற்றூர்தி சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், தமிழ் தலைமைகளிடம் ஐக்கியம் இருக்கவேண்டியது அவசியமே. ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும் எனக்கூறுவது தமிழர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கான ஒரு திட்டமேயென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.