ஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்!!


வவுனியா, ஓமந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலய பரிபாலன சபையின் நிர்வாக சபை உறுப்பினர் வே.சந்திரமோகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் உட்பட பலர் கலந்துகொண்டு வசந்த மண்டபத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கம்பரெலிய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்துக்கான கட்டுமானம், 30இலட்சம் ரூபாய் செலவில் கிராம மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ளது. இதன்போது, ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், கிராம அமைப்புக்கள், அப்பகுதி கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.