ஆடை விவகாரத்தில் கைதுசெய்து விடுவிக்கப்பட்ட பெண் உரிமை மீறல் வழக்கு தாக்கல்!!
கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் அணிந்திருந்த ஆடையொன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்த, 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண் ஒருவரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, இந்த வழக்கை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் சார்பாக தாக்கல் செய்துள்ளார்.
அந்த பெண் அணிந்திருந்த ஆடை ஒன்றில் பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி, மஹியங்கனை பொலிஸார் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி, அவரைக் கைது செய்து, 18 ஆம் திகதி மஹியங்கணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது, குறித்த பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஜுன் மாதம் 03 ஆம் திகதி, சம்பந்தப்பட்ட பெண்ணின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதங்களைக் கவனத்திற் கொண்ட நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியது.
இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் ஆடையில் காணப்பட்ட வடிவம், தர்மச் சக்கரம்தானா என்பதை அடையாளம் காண்பதற்காக, அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபைக்கும் தாம் அனுப்பி வைத்ததாகவும், ஆனால், அதனை ஒப்பீடு செய்வதற்குரிய சரியான தர்மச் சக்கர வடிவம் தம்மிடம் இல்லை என, அவர்கள் தெரிவித்து விட்டதாகவும், மஸாஹிமாவுக்கு பிணை வழங்கிய அன்று, நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, தனது ஆடையில் இருந்த வடிவத்தை காரணம் காட்டி, தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தமையின் ஊடாக, தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் மஸாஹிமா உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை