பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உங்களுக்கு முற்றுமுழுதாக உதவும்.!!

இந்திய அரசு சிறப்பாக. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. ஈழத் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனவும் செய்யப் போவதும் இல்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு சரவணபவன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் .

இலங்கையிலுள்ள நாளிதழ்களில் செய்தி வெளிவந்ததைப் பார்த்தேன்

இலங்கை ஆதிகாலம் தொட்டுச் சிவபூமி  பின்னரே புத்தர்கள் வந்தார்கள் கிறித்தவர்கள் வந்தார்கள் முகமதியர் வந்தார்கள்

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை.

தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிருத்தவர்கள் ஆக்குவதே.

தூண்டுதல் மதமாற்றத்தையோ கட்டாய மதமாற்றத்தையோ பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கிறார்.

திருக்கேதீச்சரம் திருக்கோயில் கட்டுவதற்கு இந்திய அரசு பல கோடி ரூபாய்களை வழங்கியது. கோயில் வாயிலில் வரவேற்பு வளைவு உடைத்தவர் கத்தோலிக்க பாதிரியார். 

கத்ோலிக்கருக்குத் துணை நிற்பவர் திரு செல்வம் அடைக்கலநாதன். பாதிரியார் பிணையில் வர உதவினார்.

மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடிஸ்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் திரு ஆபிரகாம் சுமந்திரன் 

மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் திருமதி சாவித்திரி சுமந்திரன்.

தமிழர்களுக்கு எதிரான சைவர்களுக்கு எதிரான கடும் போக்குடைய இவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கப் போனால் பிரதமர் மோடி உதவுவாரா?

ஈழத்தமிழர் சார்பாளராக இவர்கள் போவதை இந்திய அரசு விரும்பவில்லை எனப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது 

அண்மைக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனித்தம்பி யோகேஸ்வரன் தில்லி வந்த பொழுதும், கிறித்தவர்களை உங்கள் சார்பாக அனுப்பாதீர்கள் எனப் பாரதிய சனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு சிறப்பாக சைவர்களுக்கு உதவி வேண்டுமானால் அரசியல் தீர்வைக் கொண்டு வர வேண்டும் ஆனால் சைவ தலைமை உள்ள கட்சிகள் பாரதப் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும்.

1. தூண்டுதல் மூலமும் கட்டாயமாகவும் மதமாற்றும் கிறித்தவர்களோ,
2. சைவத் திருக்கோயில்களை உடைக்கும் கத்தோலிக்கர்களோ தில்லிக்கு வந்தால் மோடியைச் சந்தித்தால் பிரதமர் மோடியோ அவரது அரசோ ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்ய முனையாது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சரவணபவன் அவர்களுக்கு தெரிவிப்பது எனது கடமையாகும்..

சைவத் தமிழர்களுடைய நன்மை பேணுகின்ற சைவத் தமிழ்த் தலைமைகளை அனுப்புங்கள் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு முற்று முழுதாக உதவும்.
நன்றி
தமிழ்த்திரு. அர்ஜுன் சம்பத் 
தலைவர் 

 இந்து மக்கள் கட்சி, 
தமிழகம் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.