அரவிந்த் சாமியின் ‘புலனாய்வு’!

அரவிந்த் சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ரீ என்ட்ரியானாலும் தனி ஒருவன் திரைப்படம் அரவிந்த் சாமிக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் செக்கசிவந்த வானம், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது அவர் நடிப்பில் நான்கு படங்களின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ள நிலையில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறார். இருட்டறையில் முரட்டு குத்து, ஹர ஹர மஹாதேவகி ஆகிய அடல்ட் படங்களை இயக்கிய சந்தோஷ் ஆர்யா, சாயிஷா நடித்த கஜினிகாந்த் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘புலனாய்வு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைக்க, எக்செட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் வி மதியழகன் தயாரிக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.