ஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!!

ஹொங்கொங்கில் அண்மையில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


சீனாவின் ஆதரவுப் பெற்ற ஹொங்கொங் நிர்வாக தலைவர் கேரி லாம், குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பதவி விலக கோரியும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுமார் 20 லட்சம் பேர் ஒன்றுக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்துவதற்கான மிகப்பெரிய பதாதைகளை உயரத்தில் கட்டச் சென்றவர் கீழே விழுந்து காயமடைந்தார்.

காயமடைந்த அவரை அழைத்துச் செல்வதற்காக நோயாளர் காவு வாகனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு விரைந்த நோயாளர் காவு வாகனம் காயமடைந்தவரை ஏற்றிக் கொண்ட பின்னர் நகரத் தொடங்கியது.

நொடிப் பொழுதில் கடல் அலை ஒதுங்கி மீண்டும் கூடுவதுப் போல், 20 லட்சம் பேரும் ஒதுங்கி வாகனத்திற்கு வழி விட்டனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறிய காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதேபோல் கடந்த புதன்கிழமை அன்று நடத்திய போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீசிய குப்பைகளை மறுநாள் தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.