உறவுக்கெல்லாம் ஏது காலம்....!

நெருங்கிவந்து நேசிக்கப்பார்க்கின்றேன் ..ஏனடி பெண்ணே ஒதுங்குகின்றாய் ...!
ரணம் சுமக்கும் உன்  மனதுக்கு மருந்திட வரம் தாராயோ...?

அச்சச்சோ தோழா...!!
அழகாய்த்தான் நீ ஆரம்பிப்பாய் ...
பசித்தவயிறுக்கு சுவையாயும் ,கனத்த மனதிற்கு கணிவாகவும் ...
முதற்கண் இனிக்குமடா...
பிற்பாடு கசக்குமடா.....வேண்டாமடா போய்விடு...

அணுகுமுறையில் ஈர்க்கச்செய்ய மாட்டேன்..
ஆசை வார்த்தைகள் கூறமாட்டேன்,
அறிவுரைகள் பயன் தரவே நெறிமுறையாய் பழகிடுவேன்....
வரைமுறை தாண்டும் போது கண்டித்துவிடு கண்மணியே....!
சத்தியமாய் தீண்டமாட்டேன்....

மாலைசூடிக்கொண்டேன் என் தோழா...
இனி மாற்றுக்கருத்து என்னிடமில்லை...
உண்மையாய் நீயிருந்தாலும் உலகமதை ஏற்பதுமில்லை....
பகிரங்கப்பழகுதலில் பொருளின்றி வாழ்வழியும் ...வந்தவழி போய்விடு வாக்குவாதம் நமக்குள் வேண்டாம்...

நீ சொல்வதும் சரிதான் பெண்ணே...
இனி நான் என்ன சொல்வதற்கு....!
ஊருக்காய் வாழ்கையிலே நல் உறவுக்கெல்லாம் ஏது காலம்....!
பத்திரமாய் போ என்றுரைத்து அவன் செல்ல
பரிதாபமாய் நானும் மறைகின்றேன்.

-சபானா சிம்றாத்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.