கோட்டாவின் மனுக்கள் நிராகரிப்பு!!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த இரண்டு மனுக்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
டீ. ஏ. ராஜபக்ஷ நினைவகத்தை நிர்மாணிக்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை இரத்துசெய்ய கோரி, கோட்டாபய ராஜபக்ஷ குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த மனுவை நிராகரித்துள்ளது.
இதன்படி, டீ. ஏ. ராஜபக்ஷ நினைவக மோசடி வழக்கு நாளை முதல் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில் தடை இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை