ஐ.எஸ்.உடன் தொடர்புடையவர்கள் மீது தமிழகத்தில் வழக்குப் பதிவு!

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் மூவர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவையில் தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏழு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது அசாருதீன் என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், அபுபக்கர் சித்திக், இதயத்துல்லா, சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா உள்ளிட்ட அறுவரை என்.ஐ.ஏ அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முகமது உசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகியோர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மூவரின் வீடுகளிலும் சிறப்பு நுண் புலனாய்வு பிரிவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்தே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இவர்கள் மூவரும் இலங்கையில் தாக்குதல் நடத்திய  தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.