யாழ் மாநகர முதல்வர் தலைமையில் நூலகம் எரிப்பு நினைவு கூரப்பட்டது!!


யாழ்ப்பாணம் பொதுநூலகம் 38 ஆண்டுகளின் முன்னர் இதே நாளில் எரிக்கப்பட்டது. அன்றைய ஆளும் ஐ.தே.க அரசின் அமைச்சர்களும் இந்த மாபாதக செயலில் பங்கேற்றிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டதன் 38ம் ஆண்டு  நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
நூலகம் எரிக்கட்டதை அறிந்ததும், தாவீது அடிகளாரும் உயிரிழந்திருந்தார். அவரும் இன்று நினைவு கூறப்பட்டிருந்தார். இந்தநிகழ்வு யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.