சென்னையில் இடம்பெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் உயராய்வு உரைத்தொடரின் முதலாம் நிகழ்ச்சி!!

தமிழ் மரபு அறக்கட்டளையின் உயராய்வு உரைத்தொடரின் முதலாம் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.  வரலாற்றில் ஆர்வம் கொண்ட பலர் வந்திருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.
பொதுவாகவே இவ்வகை ஆய்வுத் தரமுள்ள நிகழ்ச்சிகளுக்கு 30 பேர் கூடுவார்களோ என்ற வகையில் தான் என் எண்ணம் இருந்தது . ஆனால் அரங்கம் நிறைந்து 100 பேருக்கு மேல் வந்திருந்து தமிழகத்தில் வரலாற்றில் ஆர்வம் மிகுந்து இருக்கின்றது என்ற உண்மையை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்திருந்தது. வெகு தூரத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருப்பத்தூர், வேதாரணியம் என பல பகுதிகளில் இருந்து வந்திருந்த வரலாற்று ஆர்வலர்களும் தொல்லியல் துறையினரும் ஒரு மணி நேர உரையை கேட்டு பின்னர் ஒன்றரை மணி நேர கேள்வி பதில் அரங்கத்திலும் கலந்து சிறப்பித்தனர். .Powered by Blogger.