ஒவ்வோர் இரவுகளின் சாயல்களும் புதிரானவை!

சில இரவுகள் கண்ணீர்த்துளிகளின்  திரவத்தினாலேயே நெய்யப்பட்டது

இரவின் தீவிரம் ஒவ்வொரு இதயத்தினதும் இழப்புக்களின் ரணங்களை சேகரிப்பதை
மணிக்கு மணி நிறம்மாறி மாறிப் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றது

ஓவென்று கதறியழ இருளின் வெறிச்சோடிய தனிப்பரப்பொன்றே மிகுந்த ஆறுதலளிக்கக்கூடிய பெருமருந்தாயுள்ளது

தூக்கமற்ற இரவுகளின் மொழிகள்
தொடர்நாவலொன்றின்  பக்கங்கள் போன்று
நீண்ட அனுபவங்களை அள்ளித் தருகின்றன

இனந்தெரியா ஈசல்களின் இரைசலுள் அகப்பட்டு சில இரவுகள் பிரார்த்தித்துக்கொண்டிருக்க....
வெற்றுக் காகிதங்களில் முழு வாழ்வையும்
தேடியோடி தோற்றுக்கொண்டிருக்கிறது மனது!

ஒவ்வோர் இரவுச்சித்திரங்களும் மறுஜென்மத்திலும்
மறுக்கவும் மறக்கவும் முடியா முடிவிலிகளே...

(கற்பனை)
தமிழ் நதி
Powered by Blogger.