என்னை முதல்வராக்குங்கள் இல்லை என் மகனை அமைச்சராக்குங்கள்!!

ஓ.பி.எஸ் மகனின் அமைச்சர் பதவி விவகாரத்தை கோஷ்டி மோதல் ஏற்படும் என்கிற காரணத்தை சொல்லி மத்திய அரசு இதை சாமர்த்தியமாக அதிமுகவின் தலையில் சுமத்திவிட்டது. உண்மையில் மத்திய அமைச்சர் பதவிக்காக அந்தளவுக்கு அதிமுகவுக்குள் அடிதடி நடந்தது.  என் புள்ளைக்குத்தான் தரவேண்டும் என்று ஓ.பி.எஸ் ஒற்றைக்காலில் நின்றார். எடப்பாடி தரப்போ வைத்திலிங்கத்துக்குத்தான் என்று முஷ்டி தூக்கியது.


 நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு மத்திய அமைச்சரவை பதவியேற்று முடித்துவிட்டது. இதையொட்டி அதிமுகவில் பெரும் பூகம்பமே நடந்துகொண்டிருக்கிறது. மறுபடி இரு பிளவாக பிரியும் அளவுக்கு இந்த மோதல் முற்றிக்கொண்டு வருகிறது. ஓ.பி.எஸ் தன் பிடிவாதத்தை தளர்த்தும் நிலையில் இல்லை. டெல்லியில் மகனுடன் முகாமிட்டு பாஜக தலைவர்களை சந்தித்து குமுறிக் கொட்டி வருகிறார். மகனுக்கு அமைச்சர் பதவி. இல்லை எனக்கு முதல்வர் பதவி... இந்த இரண்டில் ஒரு முடிவு வந்தே ஆக வேண்டும் என பாஜகவிடம் மன்றாடி வருகிறார் என்கிறார்கள். நீங்கள் சொல்லித்தான் ஆட்சியை விட்டுக் கொடுத்தேன். நீங்கள் சொல்லித்தான் எனது அணியை மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைத்தேன் என்பது தான் ஓ.பி.எஸின் வாதம்.

அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் அதிமுகவுக்கு இடமிருக்கும் என்ற தகவல் ஓடுவதால் அதற்கான தயாரிப்புகளை இப்போதே தொடங்கிவிட்டனர். அப்போதும் அடிதடி மோதல் பலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இனி டெல்லிக்கு அடிக்கடி போய் முகாமிட ஓ.பி.எஸ் திட்டமிட்டிருப்பதாகவும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.