கல்முனைநோக்கி விரையும் அமைச்சர்கள் -காரணம்?!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியோடு அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் தற்போது கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் அதிகளவான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து குவிந்துள்ளதாகவும், இதன்காரணமாக போராட்டக்களம் பரபரப்பு மிகுந்த பகுதியாக மாறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியோடு அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயாகமகே ஆகியோர் தற்போது கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன், குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்முனை முஸ்லீம் சமூகத்தினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு

யத்தமாகி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக வியாழேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகளும் அங்கு முகாமிட்டுள்ளதுடன், அமைச்சர் மனோ கணேசனின் செயலாளர் ஜனகன் அங்கு முகாமிட்டு நிலைவரங்களை ஆராய்ந்து வருவதுடன், அதிகளவான பொதுமக்களும் போராட்டக்களத்தில் குவிந்து வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.