சென்னை குயின்ஸ்லேண்ட் பூங்காவை மூட உத்தரவு!

ராட்டினத்தின் கயிறு அறுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, சென்னை குயின்ஸ்லேண்ட் பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பூங்காவை திறக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் 'Free Fall' எனப்படும் ராட்டினம் ஒன்றின் கயிறு அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனால், இந்த விபத்தில், ராட்டினத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து இதுகுறித்த விசாரித்த சென்னை போலீசார், பூங்காவை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.கோடை விடுமுறை என்பதால், விடுமுறை இன்றி பூங்காவில் தொடர்ந்து ராட்டினத்தை இயக்கி வந்ததால், அது பழுதடைந்து கயிறு அறுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, ராட்டினத்தை சரிசெய்து முறையாக சான்றிதழ் பெற்றபிறகே பூங்காவை திறக்க வேண்டும் என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.