மன்னார், புத்தளத்திலும் ரயில் சேவைகள் பாதிப்பு!

இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.


இந்நிலையில், இப்போராட்டத்தின் காரணமாக மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்த போதும், அதனடிப்படையில் நிதியமைச்சு செயற்படாமையை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், வவுனியா புகையிரத நிலையம் எந்த விதமான செயற்படுகளும் இன்றி இன்றைய தினம் வெறிச்சோடி காணப்பட்டதாகவும் பயணிகள் தமது போக்குவரத்து தேவைகளை வேறு விதங்களில் பூர்த்தி செய்துகொண்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மன்னார் மாவட்ட ரயில் நிலையங்களும் எந்தவிதமான போக்குவரத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தளம் மாவட்ட ரயில் போக்குவரத்து சேவைகளும், குறித்த பணிப் பகிஷ்கரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் காலங்களில் பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு மேலதிக அரச பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் புகையிரத பணியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்புக்கான பிரச்சினைகள் எதிர்வரும் ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் தீர்த்துவைக்க அரசாங்கம் உறுதியெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் குறித்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது, தொடர்ச்சியாக 48 மணி நேரம் நீடிக்கும் என்பதில் மாற்றம் இல்லையென, ரயில்வே நிலைய பொறுப்பதிகார சங்கத்தின் தலைவர் கபில விமலரத்ன தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.