தொடரும் போராட்டம் - தேரர்களின் உடல்நிலையில் பாதிப்பு!!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றது.


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டுமென கோரி  கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இவர்களின் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாணத்திலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டதோடு போக்குவரத்துச் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.