தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும் !!📷

தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் மூதாளர்  உதவிதிட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்க்கண்டவாறு தெரிவித்தார் 


  மேலும் கரு்தது தெரிவிக்கையில்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாறான குடும்பங்களிற்கு மக்கள் நலன் காப்பகம் மற்றும் புலம்பெயர் உறவுகள் பலரும் உதவ முன்வந்துள்ளமையை அவர் பாராட்டினார். இதேவேளை யுத்தத்தினால் சிதை்கப்பட்ட ஏழைகளின் வீடுகள் உள்ளிட்டவற்றை சீர்செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தினார். இதேவேளை கல்முனை சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார். உரியவர்கள் உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தார' பிரதமர் நேரடியாக குறித்த இடத்திற்கு வருகை தந்து  நிலமைகளை புரிந்துகொள்ள வேண்டும் ; எனவும்  தெரிவித்தார் 

போரினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களிற்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வ  நேற்றுக் காலை 10.30 மியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள மக்கள் நலன் காப்பகத்தில் இடம்பெற்றது. குறித் நிகழ்வில் முன்னால் வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உதவிகளை வழங்கி வைத்தார். இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர் 30 பேருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன்இ உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தகது .

No comments

Powered by Blogger.