கற்பனைத் தனியன்...!!

கவிதைகளால் இரட்சிக்கும்
உன்னிடம் பேசுவதற்கு
மொழிகளை அடுக்கி  காத்திருந்தேன்
கிளி நீ வரவில்லை

வராத பறவைகளின் வரிசையே
அனாதையாய்
கழிந்தேன் காலத்தை

நிலமகள் நீர்வழி பற்றும் காதலை
கண்களுள் விட்டு
சிந்தித்தேன்
நதிகளில் கற்பனையாய் புன்னகைத்தாய் நீ

அடுக்கி வைத்த மொழிகளை
நதியில் ஊற்றி கவிதை வரைந்தேன்
எனது நெஞ்சத்தூரிகையின்
அதிசயத்தில்
கடவுளற்ற பிரம்மனானேன்

உன் இடைகளில் வழியும்
பழரச நினைவும்
செவிகளை மூடும்
கூந்தலின் போரும்
கூர்மையாய் குத்தும்
முலைகளின் மலையும்
மாதவம் மாதவமென்பேன்

மொழிகளைக் கரைத்து
நதிகள் செய்கையில் கடலென விரிந்தாய் கிளியே

தூக்கத்தை கழற்றி
கண்களை அணிந்தேன்
என்போன்ற நண்பர்கள்
தந்தையாய் புன்னகைக்க
நானோர் கற்பனைத் தனியனானேன்

நானோ பட்டமரமானேன் கிளியே
இனி நீ வரினும்
என்னிடம் இலைகளில்லை
பூக்களில்லை
பழங்களில்லை
கற்பனை ஒன்றே உண்டு
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.