தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் நாகமணியின் உடல் தீயுடன் சங்கமம்!!📷

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் செல்லத்துரை நாகமணியின் இறுதி வணக்க நிகழ்வு இன்று (26) தொல்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
1945.03.11 ஆம் திகதி பிறந்த நாகமணி, தனது இளமைக் காலத்தில் இருந்தே பல்வேறு சமூகமட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக இடம்பெற்ற பல போராட்டங்களில் பங்கெடுத்தார்.

தமிழ் மக்களுக்கு உள்ளே இடம்பெற்ற சமூக ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் முன்னின்று செயற்பட்டார். ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலத்தில் இருந்து போராட்டத்திற்கு தன்னாலான பங்களிப்பை வழங்கி வந்தார். 2009 ஆம் ஆண்டு வரை அவரது பங்களிப்பு தொடர்ந்தது.
வலி.மேற்கில் முதன் முதலில் ஒலி – ஒளி அமைப்பைத் தொடங்கிய அவர் தாயகத்தில் பல்வேறு திக்குகளிலும் இடம்பெற்ற தமிழ்த் தேசியம் சார் செயற்பாடுகளுக்கு ஒலி – ஒளி சேவையை வழங்கினார்.
இந்தியப் படைகள் தாயகத்தில் நிலைகொண்டிருந்த காலத்திலும் யுத்தத்தின் ஆரம்ப காலங்களிலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவளிப்பதில் பெரும் பங்காற்றினார். போராட்டத்திற்கு இவர் ஆதரவளித்தமையால் இந்தியப் படைகளால் தேடப்பட்டு ஒரு கட்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்டார்.
யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது வன்னிக்குச் சென்ற இவர் அங்கும் தொடர்ந்து தேசியப் பணிகளை ஆற்றி வந்தார். போராட்டத்தின் தன்னை இணைத்துக்கொண்ட இவரது மகள் 2 ஆம் லெப்டினன் தனுஷிகா ஆனையிறவு மீட்புச் சமரில் வீரச்சாவடைந்தார்.
வன்னியில் மாமுனை முள்ளியவளையில் வசித்த இவர் தற்போது சொந்த இடமான தொல்புரத்தில் மீள்குடியேறியிருந்தார். நேற்று முன்தினம் (24) தனது 74 ஆவது வயதில், தீ விபத்தில் உயிரிழந்தார்.
இவரது உடல் நேற்று (25) பிற்பகல் முதல் தொல்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராஜா கஜேந்திரன், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந.பொன்ராசா, எஸ்.சுஜிந்தன், எஸ்.ஜெயந்தன், சி.பாலகிருஷ்ணன் மற்றும் பலரும் இறுதி வணக்கம் செலுத்தினர்.
முன்னாள் போராளியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளருமான பொன்.குணரத்தினம் (பொன்.மாஸ்ரர்) தலைமையில் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற்றது. இதில் செ.கஜேந்திரன் இறுதி வணக்க உரையாற்றினார்.
தொடர்ந்து அவரது உடல் தொல்புரம் கலைவாணி சனசமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாலை 6.30 மணியளவில் பொன்னாலை இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.