தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க மாட்டேன்- ஜனாதிபதி!!

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இன்று பத்திரிகை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் , அழைப்பு விடுக்கப்பட்டாலும் அதில் முன்னிலையாகமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அது அலரி மாளிகையில் உருவாக்கப்பட்ட நாடகம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதியாக யார் தெரிவானாலும் 19வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் , அது நாட்டின் சாபக்கேடு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சோபா உடன்படிக்கைக்கு தான் முற்றிலும் எதிரானவர் என்றும், அது வெளிநாட்டு படைகளை நாட்டிற்குள் வரவழைக்கும் ஆபத்து எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.