கோஸ்டாரிகா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா – பனாமா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.


6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனாமாவின் பிராக்ரெஸா நகருக்கு 2 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


No comments

Powered by Blogger.