ஜனாதிபதியின் முடிவால் சிறைச்சாலைக்குள் நடந்த விபரீதம்!!

ஜனாதிபதியினால் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தி கிடைத்தவுடன் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தேசிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் செப்பல் பிரிவின் C3 அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதி பெரும் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 84 கைதிகள் அண்மையில் புஸ்ஸ மற்றும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அவசரமாக மாற்றி அனுப்பப்பட்டனர். C3 அறை திடீரென புதுப்பிக்கப்பட்டு, நிற பூச்சு பூசப்பட்டு, தூக்கு மேடை சோதனையிட்டமையினால் கைதிகள் பதற்றமடைந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலைக்குள் ஏதாவது நடப்பதாக சந்தேகித்த கைதிகளுக்கு நேற்று கிடைத்த செய்தியை நம்ப முடியாமல் போயுள்ளது.

அதனை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மரண தண்டனை கைதிகள் கடும் அதிர்ச்சியடைந்து, மயங்கிவிழுந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பார்த்து சுதந்திரமாக நேரத்தை கழித்த சிறைக்கைதிகள் இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர்.

இதுவரையில் C சிறைச்சாலையில் 26 அறைகள் வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.