ரஷ்ய உலங்குவானூர்தி கொள்வனவுக்கு இலங்கை விருப்பு!!

ரஷ்ய தயாரிப்பு உலங்குவானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.


மொஸ்கோவில் நடைபெறும் “இராணுவம்-2019“ பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டார்.

“ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகள் எமக்குத் தேவைப்படுகின்றன.

நாங்கள் தென் சூடான் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவற்றில் எமது உலவங்குவானூர்திகளை பணிக்கு அமர்த்தியுள்ளோம். எனவே எமக்கு மேலதிக உலங்குவானூர்திகள் தேவைப்படுகின்றன.

ரஷ்யாவின் எம்.ஐ17 மற்றும் எம்.ஐ2 4 உலங்குவானூர்திகள் மிகச் சிறந்தவை என்பது நன்றாகவே தெரியும். எனவே, அவற்றில் மேலும் சிலவற்றை கொள்வனவு செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எவ்வாறாயினும், பெரிய அளவிலான இராணுவ கருவிகளை வாங்குவதற்கு, விற்பனையாளரிடமிருந்து நிதி உதவியை உள்ளடக்கிய ஒரு உடன்பாடு குறித்து பேச்சு நடத்த வேண்டும்.

சிறிலங்கா ஒரு சிறிய நாடு. எமது பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு மிகவும் வரையறுக்கப்பட்டது.

மிகப் பெரியளவிலான கொள்வனவுகளில் ஈடுபடும் போது, கடன் அடிப்படையிலோ, கொடை பணியாற்ற வேண்டியுள்ளது, எனவே இதுகுறித்துப் பேச வேண்டும் ” என்றும் அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.