இன்னும் பதவியாசையுடன் நிர்மலா சீதாராமன்!!

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் நடக்கவிருந்த கூட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் ரத்து செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மே 31ஆம் தேதியன்று அவர் மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அவருக்கு கார்ப்பரேட் விவகார துறை நியமிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிவிட்டபோதிலும் இன்னும் அவர் அமைச்சராகப் பதவியேற்கவில்லை. நிர்மலா சீதாராமன் ஜூன் 24ஆம் தேதியன்று கார்ப்பரேட் விவகார அமைச்சராகப் பதவியேற்று, அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. கார்ப்பரேட் விவகாரத் துறை செயலாளர் இஞ்செட்டி ஸ்ரீனிவாஸ், தேசிய நிதி ஆணைய தலைவர் ரங்காச்சாரி ஸ்ரீதரன், தீவிர மோசடி விசாரணை அலுவலக இயக்குநர் அமர்தீப் சிங் பாத்தியா, இந்திய போட்டி ஆணைய அதிகாரிகள் உட்பட முக்கிய அதிகாரிகள் இந்த சந்திப்புக்காக தயாராக இருந்தனர். ஆனால் இக்கூட்டத்திற்கு நிர்மலா சீதாராமன் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற கூட்டங்களுக்கு நிர்மலா சீதாராமன் வராதது முதல் முறை அல்ல எனவும், கடந்த 26 நாட்களில் குறைந்தது இரண்டு கூட்டங்களாவது ரத்தாகியிருக்கும் எனவும் அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த மே 31ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். நிதியமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே ஜி20 சந்திப்புக்காக ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜூன் 10ஆம் தேதியன்று நாடு திரும்பிய நிர்மலா சீதாராமன் பட்ஜெட் பணிகளைத் தொடங்கினார். பின்னர், பட்ஜெட் விவகாரம் தொடர்பாக தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து வந்தார். பட்ஜெட் உரையை தயார் செய்யும் பணி மட்டுமே இன்னும் மீதமிருக்கும் நிலையில் அவர் கார்ப்பரேட் விவகார அமைச்சராக பதவியேற்காமல் தாமதித்து வருகிறார். இதனால் அதிகாரிகளுடனான சந்திப்புக் கூட்டங்களும் ரத்தாகி வருகின்றன.

No comments

Powered by Blogger.